பெருந்துறை: பெருந்துறை அருகே உள்ள மலைக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. பெருந்துறையை அடுத்துள்ள திங்களூர், போலநாயக்கன்பாளையம் கிராமம், தெற்குப்பாளையத்தில் மலைக்குமார சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. ராஜாமணி சிவாச்சாரியார் தலைமையேற்று, நடத்தி வைத்தார். விழாவில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.