சிவராத்திரியன்று பகலில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இரவில் உறங்கக்கூடாது. காலையும், மாலையும் விளக்கேற்றி வீட்டில் சிவபூஜை நடத்த வேண்டும். சிவன் படம் அல்லது சிலைக்கு வில்வ மாலை சாத்தலாம். தேவாரம், திருவாசகம், சிவபுராணம் படிக்க வேண்டும். இரவில் கோவிலுக்குச் சென்று நான்கு ஜாமத்திலும் நடக்கும் சிவ அபிஷேகத்தை தரிசிக்க வேண்டும். சிவராத்திரிஅன்று விநாயகர், முருகன், பார்வதி, பிரம்மன், விஷ்ணு, இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் விரதம் மேற்கொள்வதாக புராணங்கள் கூறுகின்றன. சிவராத்திரி விரதத்தின் மூலம் வாழும் காலத்தில் சகல சவுபாக்கியமும், வாழ்வுக்குப் பின் பிறப்பற்ற நிலையடைந்து சிவலோகமான கைலாயத்தில் வாழும் பேறும் கிடைக்கும்.