பதிவு செய்த நாள்
20
பிப்
2017
11:02
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், சீனிவாச திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வேலுார் மாவட்டம், துரைபாக்கம் பகுதியில் அமைந்துள்ள, பந்தார்விரலி நாச்சியார் சமேத நாட்டழகிசிங்கர் கோவில் உள்ளது.இந்த கோவில் பெருமாளுக்கு, ஒவ்வொரு மாதமும், ஒரு ஊரில் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. அந்தந்த பகுதி மக்கள் இந்த உற்சவத்தை நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.தமிழகத்தில், பல ஊர்களில் நடந்த திருக்கல்யாண உற்சவம், நேற்று, காஞ்சிபுரம் கிழக்கு ராஜவீதியில் தனியார் திருமணமண்டபத்தில் நடந்தது. திருக்கல்யாணத்திற்கான சடங்கு முறைகளான பந்தகால் நடுதல், புண்யாகவசனம், சங்கல்பம், நலங்கு, தாயார் கைத்தல சேவை போன்றவை விமரிசையாக நடந்தன.தொடர்ந்து, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டு, மந்திரங்கள் முழங்கி, தீபாராதனை நடந்தது.இந்த உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, பெருமாள் திருக்கல்யாண வைபவத்தை கண்டுகளித்தனர்.