பதிவு செய்த நாள்
20
பிப்
2017
12:02
ப.வேலூர்: ப.வேலூர் அடுத்த நன்செய் இடையார் ராஜாசுவாமி கோவிலில், மாசி மாத மகாசிவராத்திரி திருவிழா முன்னிட்டு, இன்று (பிப்., 20) கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து, வரும், ஐந்து நாட்களுக்கு மாலை, 5:00 மணியளவில், சுவாமி திருவீதி உலா வருதல், சிறப்பு பூஜைகள் நடக்கும். வரும், 26ல் மதியம், 1:00 மணியளவில், நன்செய் இடையார் காவிரிக்கரையில் இருந்,து காவடிகள் முத்தரித்து சுவாமி கோவிலுக்கு புறப்படுகிறது. தொடர்ந்து, மாலை, 6:00 மணியளவில், மூலவருக்கு அபிஷேகம், திருத்தேர் உலா நிகழ்ச்சி, இரவில் மாயர் பூஜை நடைபெறும். அதன்பின், கொடி இறக்கம் மற்றும் பாலிகையை வாய்க்காலில் சேர்த்தல் இவற்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. கோவில் நிர்வாகம் சார்பில் குடிபாட்டு மக்கள், 26ல் மதியம், 1:00 மணிக்கு காவடிகளுடன் நன்செய் இடையார் காவிரிக்கரைக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருவிழா காலங்களில், பலி பூஜையை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை, பரம்பரை நிர்வாக அறங்காவலர், அறங்காவலர் குழு, கிருத்திகை கட்டளைக்குழு, திருக்கோவில் குடிபாட்டு மக்கள் செய்து வருகின்றனர்.