விழுப்புரம் : விவசாய நிலத்திலிருந்த வேப்பமரத்தில் பால் வடிந்ததாக கூறி, பொது மக்கள் வழிபட்டனர். விழுப்புரம் அடுத்த திருவாமாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி காத்தவராயன். இவரது விவசாய நிலத்திலுள்ள வேப்ப மரத்தில்,கடந்த ஒரு வாரமாக பால் நிறத்தில் வெள்ளையாக திரவம் வழிந்தோடியது. இதனை அறிந்த அருகிலுள்ள அயனம்பாளையம், முத்தியால்பேட்டை மற்றும் கொய்யாத்தோப்பு கிராமங்களை சேர்ந்த பொது மக்கள், வேப்ப மரத்தில் பால் வடிவதாக கூறி, வணங்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.