பதிவு செய்த நாள்
21
பிப்
2017
12:02
ப.வேலூர்: ப.வேலூர் அடுத்த, பரமத்தி அங்காள பரமேஸ்வரி கோவிலில், வரும், 24ல், சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. பரமத்தி, அங்காளபரமேஸ்வரி கோவிலில், நாளை மாலை, 6:00 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் அம்மனுக்கு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 24ல், மஹாசிவராத்திரி அன்று, மாலை, 4:00 மணியளவில் காவிரியில் இருந்து புனித தீர்த்தம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. பின், பெருமாள் கோவிலிருந்து கரகம் பாலித்து பூப்பல்லக்கு அலங்காரம் செய்து, ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரப்படுகிறது. வரும், 25 காலை அழகு தரிசனம் மற்றும் அம்மனுக்கு பச்சை பூஜை செய்து தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் மக்கள் செய்து வருகின்றனர்.