திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த பரனுார் சத்திரம் கோவில்‚ பிரம்மோற்சவ விழா துவங்கியது. பரனுார் சத்திரம்‚ திரவுபதியம்மன் கோவிலில்‚ கடந்த 18ம் தேதி பிரம்மோற்சவ விழா துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக‚ நாளை சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு‚ திரவுபதி சமேத அர்ச்சுணன் திருக்கல்யாண வைபவம்‚ இரவு முத்துபல்லக்கில் சுவாமி வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து வரும் 25ம் தேதி இரவு கரகம் புறப்பாடாகி சுற்றுவட்டார கிராமங்களில் சுவாமியுடன் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. மறுநாள் (26ம் தேதி) மாலை 3:00 மணிக்கு‚ தேர் புறப்பாடாகி‚ முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தவுடன்‚ தீமிதி விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை‚ கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.