ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி சிவராத்திரி விழா கோலாகலமாக நடக்கிறது.பிப்.,17ல் கொடி ஏற்றத்துடன் துவங்கிய விழா தொடர்ந்து 12 நாட்கள் நடக்கிறது. தினமும் சுவாமி, அம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, வீதியுலா, ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், பக்தர்கள் செய்துள்ளனர்.