பதிவு செய்த நாள்
23
பிப்
2017
11:02
தஞ்சாவூர்: - தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில், நாளை முதல், 14வது ஆண்டு பிரகன் நாட்டியாஞ்சலி விழா துவங்குகிறது. விழாவில், 600 நடன கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர் .தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டேஷன், தென்னக பண்பாட்டு மையம் மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில், நாளை முதல், மார்ச் 2 வரை, பிரகன் நாட்டியாஞ்சலி விழா நடைபெற உள்ளது.விழாவில், 600க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவின் சாஸ்திரீய நடனங்களான கதக், மோகினி ஆட்டம் மற்றும் குச்சிப்புடி ஆகியவை இடம் பெறுகின்றன. தஞ்சாவூர் அரண்மனை சங்கீத மஹாலில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர் சார்பில், தென்னிந்திய மக்கள் நாடக விழா நேற்று துவங்கியது.துவக்க நாளான நேற்று, ரங்கராஜன் தப்பாட்டக் குழு இசைக்க, பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் அரண்மனை வளாகம் வரை, நாடக கலைஞர்கள் பேரணியாக சென்றனர். நாடகம் நடைபெறும் அரங்கத்தில், காலத்தில் உறைந்த நாடக கணங்கள் என்கிற தலைப்பில், புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.