பதிவு செய்த நாள்
23
பிப்
2017
11:02
திருப்பூர்: திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில், பொங்கல் திருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது. திருப்பூர் தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, கடந்த, 14ல், பூச்சாட்டுடன் துவங்கியது. முளைப்பாரி எடுத்தல், பால் குடம் ஊர்வலம், கம்பம் போடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு, பல்வேறு பகுதிகளில் இருந்து, நுõற்றுக்கணக்கானவர்கள் தீச்சட்டி ஏந்தி வந்து வழிபட்டனர். நள்ளிரவு படைக்கலம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், நேற்று அதிகாலை பொங்கல் விழாவும் நடைபெற்றது. இதில், ஏராளமானவர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், மாவிளக் கு எடுத்து வந்தும் வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் மாரி யம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.