Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவராத்திரியன்று பாட வேண்டிய எளிய ... கோட்டை மாரியம்மன் மாசித் திருவிழா: பூத்தமலர் பூ அலங்காரத்துடன் துவக்கம் கோட்டை மாரியம்மன் மாசித் திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா சிவராத்திரி: சிவன் கோவில்களில் குவியும் பக்தர்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகா சிவராத்திரி: சிவன் கோவில்களில் குவியும் பக்தர்கள்!

பதிவு செய்த நாள்

24 பிப்
2017
10:02

இன்று மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, அதிகாலை முதல் சிவன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பிரதான கோவில்களில், அறநிலையத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ராத்திரி என்ற சொல், சகலமும் செயலற்று ஒடுங்குதல் என்று பொருள். உயிர்கள் செயலற்று, சிவபெருமானுக்குள் ஒடுங்கும் காலமே சிவராத்திரி. சிவராத்திரி என்பது நித்ய சிவராத்திரி; மாத சிவராத்திரி; பட்ச சிவராத்திரி; யோக சிவராத்திரி; மாக சிவராத்திரி என, ஐந்து வகைப்படும்.மாசி மாதத்து கிருஷ்ணபட்ச சதுர்த்தசி, அர்த்த ராத்திரியே மகா சிவராத்திரி. சிவராத்திரி இரவில் நான்கு கால வழிபாடு நடைபெறும். முதல் காலத்தில் சோமாஸ்கந்தர்; இரண்டாம் காலத்தில் தட்சிணாமூர்த்தி; மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவர்; நான்காம் காலத்தில் ரிஷபாரூடர் என்று அழைக்கப்பெறும் சந்திரசேகரர் வழிபாடு நடக்கும்.

இந்த நான்கு காலங்களிலும், கருவறையிலுள்ள மூலவருக்கு ஆகம முறைப்படி, அபிஷேகங்கள் செய்து, வழிபாடு நடக்கும். மூன்றாம் காலமான லிங்கோத்பவ காலம் என்பதால் கருவறைக்குப் பின் உள்ள லிங்கோத்பவருக்கு வழிபாடு நடக்கும். அப்போது, ஸ்ரீருத்ர பாராயணம்; ஸ்ரீ சிவ ஸகஸ்ர நாமங்கள் உச்சரித்தல்; தேவாரத்தில் உள்ள லிங்கபுராண திருக்குறுந்தொகை பாராயணம் செய்தல் ஆகியவை நடக்கும்.

கோடி புண்ணியம்: சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவதால், உடல் பிணிகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். சிவராத்திரி அன்று தான தருமங்கள் செய்வதால், கோடி புண்ணியம் கிடைக்கும். எனவே, சிவலிங்கம், ருத்திராட்சம், ரத்தினங்கள், நிவேதனப் பொருட்கள், அன்னம் போன்றவைகளைத் தானம் செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது. இன்று மகா சிவராத்திரி என்பதால் பிரதான கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்காக அறநிலையத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவொற்றியூர் திருவொற்றிசுவரர் கோவில், திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில், கோயம்பேடு குற்றாலீசுவரர் கோவில், வேளச்சேரி தண்டீசுவரர் கோவில், மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் உள்ளிட்ட பிரதான கோவில்களில் சிவராத்திரி சிறப்பு பூஜைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  - நமது நிருபர் -

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar