பதிவு செய்த நாள்
27
அக்
2011
10:10
திருத்தணி : முருகன் கோவிலில் கடந்த 24 நாட்களில், 30 லட்ச ரூபாய் ரொக்கம், 226 கிராம் தங்கம் காணிக்கையாக, பக்தர்கள் உண்டியலில் செலுத்தியுள்ளனர்.திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்துச் செல்கின்றனர். இவர்கள் தங்களது நேர்த்திக் கடனைத் தீர்க்க ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.கடந்த மாதம், 27ம் தேதி முதல் இம்மாதம், 21ம் தேதி வரை, பக்தர்கள் உண்டியலில் அளித்துள்ள காணிக்கை, நேற்று கோவில் இணை ஆணையர் கவிதா முன்னிலையில், ஊழியர்களால் எண்ணப்பட்டது. இதில், 30.35 லட்ச ரூபாய் ரொக்கம், 226 கிராம் தங்கம், 4.874 கிலோ வெள்ளிப் பொருட்கள் கிடைத்துள்ளன.