Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அசோகாஷ்டமி என்றால் என்ன? விரும்பியதை அடையச் செய்யும் வழிபாட்டு ரகசியம்! விரும்பியதை அடையச் செய்யும் ...
முதல் பக்கம் » துளிகள்
சிவனுக்கு வில்வம், பெருமாளுக்கு துளசி ஏன்?
எழுத்தின் அளவு:
சிவனுக்கு வில்வம், பெருமாளுக்கு துளசி ஏன்?

பதிவு செய்த நாள்

06 மார்
2017
04:03

விடியலில் விஷ்ணு, மாலையில் மகேஸ்வரன் என்பது பரமாசார்யாளே சொன்ன வாக்கு. அதாவது தூங்கி எழுந்ததும் நீராடிவிட்டு பெருமாளைத் துதிக்கவேண்டும். சாயங்கால நேரத்தில் சிவபெருமானை ஆராதிக்க வேண்டும் என்று ஒரு வழிமுறையை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அதிகாலை நேரம் என்பது, சூரியனின் வெப்பம் பரவ ஆரம்பிக்காத குளிர்ச்சியான நேரம். அந்த சமயத்தில் குளிர்ச்சியால் பரவும் கிருமிகளின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க துளசியே மருந்து. அதனால்தான் அதனை வழிபாட்டோடு கலந்து, துளசியை பெருமாளுக்கு சமர்ப்பித்துவிட்டு, துளசி தீர்த்தத்தையோ, ஓரிரு துளசி தளங்களையோ எடுத்துக்கொள்ளும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

புராணங்கள், பெருமாள் குளுமையான பாற்கடலில் வசிப்பதால் அவருக்கு வெப்பத்தை உண்டு பண்ணும் துளசியால் அர்ச்சிக்கவேண்டும் என்கிறது. மாலை நேரம் எங்கும் வெம்மை தகித்துவிட்டு மீண்டும் குளுமை பரவத் தொடங்கும் நேரம். அந்த சமயத்தில் குளிர்ச்சியை உண்டுபண்ணும் வில்வம் கலந்த தீர்த்தத்தை அல்லது ஓரிரு வில்வதளத்தினை சிறிது உட்கொள்வது அந்த சமயத்தில் பரவும் குளுமையால் தொற்றக்கூடிய நோய்க்கிருமிகளில் இருந்து காத்துக்கொள்ள உதவும். அதனால்தான் மாலை நேர வழிபாட்டை மகேசனுக்கு உரியதாகச் சொல்லி, அதில் வில்வத்தை இடம்பெறச் செய்திருக்கிறார்கள் நம் முன்னோர். தத்துவ ரீதியாகச் சொன்னால், விடியலை உற்பத்தி எனும் தொடக்கமாகவும், இரவினை ஊழியாகிய முடிவாகவும் சொல்வது உண்டு. அதோடு விழித்து எழுவதை பிறப்புக்கும் தூக்கத்தை இறப்புக்கும் சமம் என்றும் சொல்வார்கள். ஒவ்வொருநாளும் தூங்கி எழுவது பிறவிக்கு சமம் என்பதால், காத்தல் செயலைச் செய்யும் திருமாலுக்கு முதல் வழிபாடு உறக்கம் இறைவனோடு ஒடுங்குவதற்கு ஒப்பானது என்பதால், தன்னோடு ஒடுக்கி உறக்கத்தில் ஆழ்த்தும் ஈசனுக்கு மாலை ஆராதனை.

இன்றைய விஞ்ஞானம், பகல் நேரத்தில் தொற்றக்கூடிய பாக்டீரியாக்களில் இருந்து தப்பிக்க, துளசியில் இருந்து வெளிப்படும் ஆக்ஸிஜன் உதவுவதாகவும், இரவு நேரத்தில் பரவக்கூடிய நோய்க் கிருமிகளில் இருந்து வில்வம் பாதுகாப்பு அளிப்பதாகவும் கண்டுபிடித்துச் சொல்கிறது. இவை அனைத்தையும் அன்றே அறிந்துதான் தெய்வத்தை வழிபாட்டோடு நம் வளமாக வாழவும் வழி செய்து வைத்திருக்கிறார்கள் முன்னோர்.

 
மேலும் துளிகள் »
temple news
சிவன் தன் தலையின் இந்த பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். இன்று சந்திர தரிசனம் செய்வதால் ... மேலும்
 
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
மாதம்தோறும் தேய்பிறை சதுர்த்தசியில் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி விரதம் இருந்தால் ... மேலும்
 
temple news
உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரின் அமதள்ளி கிராமத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீ வீர கணபதி கோவில். பல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar