பதிவு செய்த நாள்
10
மார்
2017
12:03
திருப்பூர்: திருப்பூர் பத்மாவதிபுரம் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. கோவிலில், பொங்கல் விழா, 3ல் துவங்கியது. கிராமசாந்தி, பூச்சாட்டு, பொறி மாற்றுதல், விநாயகர் பொங்கல், கும்பம், படைக்கலம், பட்டு கொண்டு வருதல், அம்மை அழைத்தல் நடந்தது. தொடர்ந்து, மாவிளக்கு, ஸ்ரீ மாகாளியம்மன் பொங்கல், உச்சி பூஜை, கும்பம் கொண்டு விடுதல் நடந்தது. நேற்று, காலை மஞ்சள் நீர் விளையாடுதல், மதியம் அபிஷேக பூஜை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடந்தது. தொடர்ந்து, ‘அம்மன் அருள்’ என்ற தலைப்பில் தேசமங்கையற்கரசி ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.