பதிவு செய்த நாள்
10
மார்
2017
12:03
புதுச்சேரி: கவிக்குயில் நகர் பரிமள பாண்டுரங்கன் கோவிலில், பாண்டுரங்கன் பஜன் சமாஜ் சார்பில், அபங்க பஜன் நிகழ்ச்சி, நாளை மறுநாள் (12ம் தேதி) நடக்கிறது. புதுச்சேரி, கவிக்குயில் நகர், 3வது குறுக்குத் தெருவில் மகாலட்சுமி, ரகுமாயி சமேத பரிமள பாண்டுரங்கன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பாண்டுரங்கன் பஜன் சமாஜ் சார்பில், நாளை மறுநாள் 12ம் தேதி, மாலை 6:30 மணிக்கு, அபங்க பஜன் நடக்கிறது. கடையநல்லுார் ராஜகோபால் தாஸ் குழுவினர் பங்கேற்று, பஜன் நடத்துகின்றனர். விழா ஏற்பாடுகளை, மகாலட்சுமி ரகுமாயி சமேத ரங்க பரிமள பாண்டுரங்கன் லட்சுமி நாராயணன் டிரஸ்ட் செய்துள்ளது.