மதுரை: மதுரை , செக்கானூரணி ஏகநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது.
கிண்ணிமங்கலம் ஏகநாதர் சுவாமி ஜீவா சமாதியில் நித்தம் பூஜை நடைபெறுகிறது ஒவ்வொரு பிரதோஷ நன்னாளிலும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகிறது. விழாவில் சிவனுக்கும், நந்தியம் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேமும் ஆராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.