திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் தசாவதார கோலத்தில் அம்பாள் எழுந்தருளினார். கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா பிப்.23 ல் துவங்கி விமர்சியாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் தசாவதாரம் விழா நடந்தது. இதில் அதிகாலை முதல் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. இரவில் அம்பாள் காளி, கூர்ம, மச்ச உள்ளிட்ட பத்து அவதாரங்களில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விடிய விடிய தசாவதார விழா நடந்ததால், பாதுகாப்பிற்காக 200 போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், நாளை மாலை 6:00 மணிக்கு தெப்ப உற்சவமும் நடக்கிறது.