பதிவு செய்த நாள்
14
மார்
2017
12:03
ஈரோடு: சிருங்கேரி ஸ்ரீஜகத்குரு ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸன்னிதானம், அவரது சீடர் ஸ்ரீவிதுசேகர பாரதீ ஸன்னிதானம் ஆகிய இருவரும், இன்று முதல், 19ம் தேதி வரை, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு ஸ்தலங்களில் விஜயம் செய்கின்றனர். தமிழகத்தில் ஒரு மாதம் விஜயம் செய்யும் வகையில், கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து இன்று மாலை, 4:00 மணிக்கு ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி வழியாக, தமிழகம் வருகிறார். பண்ணாரியில் பக்தர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஸ்ரீமடத்தின் அறிவிப்பின்படி, 14 முதல், 16ம் தேதி வரை சத்தியமங்கலத்திலும், 16ம் தேதி மாலை முதல், 18ம் தேதி வரை கோபியிலும், 18 முதல், 19ம் தேதி வரை ஈரோட்டிலும், 19 மாலைக்குப்பின், 22 வரை சேலத்திலும், 22 மற்றும், 23ம் தேதி திண்டுக்கல்லிலும், 25, 26ல் தென்கரையிலும், 26, 27ல் கொடிமங்கலத்திலும், 27 முதல் ஏப்.,4 வரை மதுரையிலும், 4 முதல், 13 வரை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் விஜயம் செய்கிறார். இன்று சத்தியமங்கலம் வரும் ஸன்னிதானம் ஓய்வெடுத்துவிட்டு, நாளை (15ம் தேதி) சத்தியமங்கலம் ஆதிசங்கரர் கோவில் கும்பாபி?ஷகத்தில் பங்கேற்கிறார். 18ல் பவானி சிருங்கேரி சங்கர மடத்தின் புதிய பிரவசன மண்டபத்தை திறந்து வைக்கிறார். அன்று மாலை ஈரோடு, பழையபாளையம் சக்தி துரைசாமி திருமண மஹால் வளாகத்தில் தரிசனம் அருளி, சந்திரமௌலீஸ்வர பூஜை நடத்துகிறார். மறுநாள் (19ம் தேதி) காலை, 8:00 மணிக்கு ஸ்ரீசாரதா சந்த்ர மௌலீஸ்வரர் பூஜை, 10:00 மணிக்கு ஸன்னிதானங்களின் தரிசனம், பாத பூஜை நடக்கிறது. அன்று மாலை, 4:00 மணிக்கு சேலம் செல்கின்றனர்.