பதிவு செய்த நாள்
22
மார்
2017
12:03
ஈரோடு: ஈரோடு எல்லை மாரியம்மன் கோவிலில், பொங்கல் விழா, இன்று நடக்கிறது. ஈரோடு மரப்பாலம் நேதாஜி வீதியில், பால விநாயகர், பாலமுருகன், கன்னிமார், எல்லை மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா கடந்த வாரம் தொடங்கியது. விழாவையொட்டி, திருவிளக்கு பூஜை, அக்னி கபால ஊர்வலம், காவிரியில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, அக்னிசட்டி ஏந்தியும், பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்தனர். இந்நிலையில் இன்று பொங்கல் வைபவம், மாவிளக்கு பூஜை நடக்கிறது. இதை தொடர்ந்து புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, இரவில் நடக்கிறது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். வாணவேடிகையுடன் கும்பம் காரை வாய்க்காலில் விடும் நிகழ்ச்சி, நாளை நடக்கிறது.