பதிவு செய்த நாள்
22
மார்
2017
12:03
குளித்தலை: திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, தோகைமலை மக்கள் சார்பில், நான்காம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடந்தது. நவீன மின்விளக்குகள் பொருத்திய வாகனத்தில், அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் திருஉருவ படத்துடன், பக்தர்கள் நேர்த்திக்கடனாக பூக்களை கொண்டு சென்றனர். முன்னதாக, குறிஞ்சி நகர் பகவதியம்மன், கருப்பசாமி, வெள்ளபட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபி?ஷகம் நடந்தது. பின், குறிஞ்சி நகர் பகவதியம்மன் கோவிலில் இருந்து கீழவெளியூர், காவல்காரன்பட்டி, சோம்பரம்பேட்டை வழியாக, சமயபுரம் மாரியம்மன் கோவில் சென்று அம்மனுக்கு பூக்களை காணிக்கையாக தோகைமலை பகுதி பக்தர்கள் செலுத்தினர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.