பதிவு செய்த நாள்
22
மார்
2017
12:03
ஊத்துக்கோட்டை: தேய்பிறை அஷ்டமி நாளை ஒட்டி, ஸ்ரீகால பைரவர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர். ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ளது, ஸ்ரீகால பைரவர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும், வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி நாட்களில், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். விடுமுறை நாட்களில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமியை வழிபடுகின்றனர். நேற்று முன்தினம் மாலை, தேய்பிறை அஷ்டமி நாளை ஒட்டி, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.