கும்பகோணம் ராமசுவாமி கோவிலுக்கு புதிய தங்க சேஷவாகனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2017 12:03
தஞ்சாவூர்: தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் ராமசுவாமி கோவிலுக்கு 7 லட்சம் ரூபாய் செலவில் தங்க சேஷவாகனம் நேற்று வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் முன்னதாக விஸ்வநாத அய்யர் குடும்பத்தினரால் செய்துகொடுக்கப்பட்ட மரத்தினால் ஆன பழைய சேஷவாகனம் சிதிலமடைந்து உபயோகிக்க இயலாத நிலையில் இருந்ததால், விஸ்வநாத அய்யர் குடும்பத்தினர் திருக்குடந்தை ஸ்ரீ சீதாராம பக்த ஜன சபாவுடன் இணைந்து புதிய தங்க முலாம் பூசப்பட்ட தங்க சேஷ வாகனத்தை 7 லட்சம் ரூபாய் செலவில் செய்து கொடுத்தனர். இந்த சேஷ வாகத்தை நேற்று விஸ்வநாதஅய்யர் குடும்பத்தினர் கோயில் செயல் அலுவலர் கலைவாணி முன்னிலையில் பட்டாச்சாரியர் கண்ணனிடம் வழங்கி பிரதிஷ்டை செய்தனர். இதையடுத்து புதிய சேஷவாகனம் நேற்று மாலை தோரோடும் வீதிகளில் வெள்ளோட்டம் விடப்பட்டது.