ராமநாதபுரம், ராமநாதபுரம் அருகே குயவன்குடியில் ஷிர்டி சாய்பாபா ஆலயத்தில் கூட்டு பிரார்த்தனை நடந்தது. மதியம் 12:00 மணிக்கு சிறப்பு ஆராதனை, பஜனை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4:30 மணிக்கு கூட்டு பிரார்த்தனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.