பதிவு செய்த நாள்
03
ஏப்
2017
10:04
மயிலாப்பூர்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவில் பங்குனி திருவிழா, கொடியேற்றத்துடன், நேற்று வெகுவிமரிசையாக துவங்கியது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். நேற்று கொடியேற்றத்துடன் துவங்கிய இந்தாண்டு பங்குனி பெருவிழா, வரும், 13ம் தேதி வரை வெ குவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. விழாவின் முதல் நாளான நேற்று, 5:40 மணியளவில் கொடியேற்றப்பட்டது. தொ டர்ந்து, பவழக்கால் விமானத்தில் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் வீதியுலா நடந்தது. பின், இரவில் புன்னை மர வாகனத்தில் கபாலீஸ்வரரும், கற்பக மர வாகனத்தில் கற்பகாம்பாளும், வேங்கை மரவாகனத்தில் சிங்காரவேலரும் எழுந்தருளி வீதியுலா நடந்தது. கொடியேற்றத்தை முன்னிட்டு, கோலவிழி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை, அதிகாரநந்தி சேவையும்; 6ம்தேதி, வெள்ளி ரிஷப வாகன சேவையும்; 8ல் தேர்த் திருவிழாவும்; 9ல், 63 நாயன்மார்கள் காட்சியளிக்கும் விழாவும் நடைபெறஉள்ளது. வரும், ஏப்., 10ம் தேதி மாலை , பிச்சாடனார், 11ம் தேதி இரவு, திருக்கல்யாண உற்சவமும், 12ம் தேதி, உமா மகேஸ்வர் தரிசனமும் நடைபெறும். 13ம் தேதியன்று விழா நிறைவடைகிறது.