ஆர்.எஸ்.மங்கலம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே வரவணி மாரியம்மன் கோயில் பங்குனி உற்சவ விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. முன்னதாக கடந்த எட்டு நாட்களாக அம்மனுக்கு இரவில் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். விழாவை முன்னிட்டு கிடா வெட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.