பதிவு செய்த நாள்
07
ஏப்
2017
02:04
சேலம்: கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் புதுப்பிப்புப் பணி துவங்கி, சுறுசுறுப்பாக நடந்தது. ஆனால், கோட்டை பெரியமாரியம்மன் அறக்கட்டளை நிர்வாகி ரஜினிசெந்தில், கருவறையை இடிக்க அறநிலையத்துறை அதிகாரிகள் முயற்சிப்பதாகக் கூறி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு கடந்த மாதம் புகார் அனுப்பினார். இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தல்படி, புதுப்பிப்புப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. செயல் அலுவலர் மாலா கூறுகையில், அறக்கட்டளை நிர்வாகி, கருவறையை இடிக்கும் நோக்கில் செயல்படுகிறோம் என அனுப்பிய புகார் மனு எதிரொலியாக, வெளிப்பிரகாரம் கட்டும் பணியை நிறுத்த, அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், மாத இறுதிக்குள் பணி மீண்டும் துவங்கும், என்றார்.