பதிவு செய்த நாள்
07
ஏப்
2017
02:04
சேலம்: சேலம், கருப்பூரில் உள்ள இஸ்கான் கோவிலில், பகவான் ராமரின் அவதார தின விழா, நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அதில், மாலை, 6:30 மணிக்கு பஜனை, 7:30 மணிக்கு ராமலீலா நாடகம் நடந்தது. இரவு, 8:30 மணிக்கு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
* சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், நேற்று மாலை, 6:00 முதல், 9:00 மணி வரை, மூலவருக்கு, திருப்பதி வெங்கடேஸ்வர அலங்காரம், தாயாருக்கு, பத்மாவதி அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது.