ராஜபாளையம், ராஜபாளையம் ராம்கோ குரூப் சார்பில் தெற்கு வெங்காநல்லுார் சாலையில் அமைந்துள்ள வேதபாடசாலை அருகில் சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயம் கட்டப்பட்டு சிருங்கேரி மடத்திற்கு அர்ப்பணிக்கபட உள்ளது. இதற்கான யாக சாலை பணிகள் நேற்று முன்தினம் கணபதி ேஹாமம், பூர்ணாஹூதி, அங்குரார்ப்பணம் மற்றும் ரக்சோக்ன ேஹாமம் நடந்தது. யாகசாலை பூஜைகள் பாரதீதீர்த்த சன்னிதானம், விதுசேகர பாரதீ சன்னிதானம் மேற்பார்வையில் நடந்து வருகிறது. காலை மாலை ஸ்ரீ சாரதா சந்திர மவுலீஸ்வர பூஜை நடந்தது. நேற்று மாலை திருவனந்தபுரம் ராமகிருஷ்ணன் குழுவினரின் பஜனைமண்டலி நடந்தது. யாக சாலை மற்றும் தொடர் நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதியினர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா, துணை சேர்மன் பி.ஆர் வெங்கட்ராமராஜா செய்துள்ளனர்.