பதிவு செய்த நாள்
07
ஏப்
2017
04:04
சென்னிமலை: சென்னிமலை மலை முருகன் கோவிலில், பங்குனி உத்திர தேர்திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற கோவிலான, சென்னிமலை மலை முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா, கொடியேற்றம் நடந்தது. விழாவையொட்டி முருகன், வள்ளி, தெய்வானை உற்சவ மூர்த்திகளுக்கும். மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து தலைமை குருக்கள் ராமநாதசிவம், கொடி மரத்துக்கு சிறப்பு பூஜை செய்ய, இசை வேளாளர் சமூகத்தினர், கோவில் முன்புள்ள கொடிமரத்தில், சேவல் கொடியேற்றி, விழாவை முறைப்படி துவக்கி வைத்தனர். முருகப்பெருமானுக்கு நாளை (ஏப் 8ல்) திருக்கல்யாணம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.