ஸ்ரீமுஷ்ணம் குழந்தையம்மன் பங்குனி விழா: வேடமிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2017 06:04
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் குழந்தையம்மன் கோவில் பங்குனி திருவிழாவில் பக்தர்கள் பல்வேறு வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் குழந்தையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி விழா கடந்த 30 ந்தேதி காப்பு கட்டி தொடங்கியது. தொடர்ந்து 31 ந்தேதி சிறப்பு அபிஷேகம், 1ம் தேதி சாகான் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து காளி, மாரி, புலி வேஷம்,முருகன், லட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட பல்வேறு சுவாமி வேடங்கள், எமதர்மன், சித்திர குப்தன், குறவன் குறத்தி ஆகிய வேடங்கள் போட்டு பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். மேலும் செடல் மற்றும் தலைத்தேர் உற்சவங்கள் நடந்தது. செங்குந்தர் தெரு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.