கூடலுார்: கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்பட்டது. சுந்தரவேலவருக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சுருளி மலை- பழநி மலை பாதயாத்திரை குழுவினர் பஜனைப் பாடல்கள் பாடினர். சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பொங்கல் மற்றும் பலச்சாறு பிரசாதம் வழங்கப்பட்டது.