தேவதானப்பட்டி: சங்கரமூர்த்திபட்டி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து ேநர்த்திக்கடன் செலுத்தினர். பெரியகுளம் தாலுகா, சங்கரமூர்த்திபட்டி பத்ரகாளியம்மன் கோயில் முதலக்கம்பட்டி, தாயமங்கலம், குள்ளப்புரம், வைகை புதுார் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயில் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. இவ்விழாவில் மாவிளக்கு எடுத்து, பொங்கல் வைத்தனர். மேலும் பால்குடம் எடுத்தனர். பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து தங்கள் நோ்த்திக்கடன்களை செலுத்தினார். பத்ரகாளியம்மன் கோயில் விழாக்குழுவினர் விழாவிற்கான ஏற்பாட்டை செய்தனர்.