பதிவு செய்த நாள்
10
ஏப்
2017
05:04
தலைவாசல்: தலைவாசல் அருகே, கற்பக விநாயகர் கோவிலில், சம்பத்ஷராபிஷேக விழா நடந்தது. தலைவாசல், கோவிந்தம்பாளையத்தில் உள்ள கற்பக விநாயகர் கோவில் கட்டி,
மூன்றாண்டு முடிந்து, நான்காம் ஆண்டு துவங்குவதால், நேற்று முன்தினம் மாலை, திருவிளக்கு ஏற்றி, அனுக்ஞை - விக்னேஸ்வர பூஜையுடன், சம்பத்ஷராபிஷேக விழா துவங்கியது. பூரண கும்ப அலங்காரம், கலச பூஜை செய்து, சகஸ்கரராம பாராயணம் மற்றும்
ஹோமம் நடந்தது. நேற்று காலை, தேவார திருமுறை பாராயணத்துடன் துவங்கிய விழாவில், விக்னேஷ்வர மற்றும் நவக்கிரக பூஜை செய்து, பூர்ணாஹூதி தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, மந்திரம் முழங்க, கலசங்களில் வைத்த ஒன்பது குடங்களில் கொண்டுவரப்பட்ட புனிதநீரை, சுவாமி அம்பாள், கற்பக விநாயகர் ஆகிய இஷ்ட தெய்வங்களுக்கும், 13
செம்பு புனிதநீரை பரிவார தெய்வங்களுக்கும் ஊற்றி, சிவாச்சாரியர்கள், சம்பத்ஷராபிஷேகம் நடத்தினர். மேலும், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, கோவில் பிரகாரத்தில் உள்ள
சுப்ரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், சேலம், அரியலூர் ஆகிய பகுதிகளில் இருந்துவந்த ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம்
செய்தனர்.