நேபாளம்: நேபாளத்தின் பக்தாபூர் பைரவர் கோயிலில் தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பக்தாபூர் பைரவர் கோயில் தேர்த் திருவிழா பிரசித்தி பெற்றது. விழாவை முன்னிட்டு, பைரவா ரதத்தை பக்தர்கள் வடம் பிடிக்க, அதில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் வழி நடத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.