பதிவு செய்த நாள்
11
ஏப்
2017
12:04
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நேற்று, திருக்கல்யாண உற்சவத்துடன், பங்குனி உத்திர உற்சவம் நிறைவடைந்தது. மாமல்லபுரத்தில், ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயாருடன், கோவில் கொண்டுள்ளார். தாயாருக்கான, பத்துநாள் பங்குனி உத்திர உற்சவம், 31ம் தேதி துவங்கியது. அன்று துவங்கி, நேற்று முன்தினம் வரை, தினமும் மாலை, 4:00 மணிக்கு, சிறப்பு திருமஞ்சனம்; மாலை, 6:30 மணிக்கு, கோவிலுக்குள் தாயார் புறப்பாடு, இரவு, 7:30 மணிக்கு, ஊஞ்சல் சேவை என, நடந்தது. இறுதி நாளான நேற்று காலை, சுவாமி, தாயார், தேவியர், பூதத்தாழ்வார், ராமானுஜர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, திருமஞ்சனம் நடந்தது. பகலில், தாயாருக்கு, ஸ்ரீசுக்த ஹோமம் நடந்தது.மாலை, தாயார் கோவிலுக்குள் உலா செல்ல, சுவாமி, ராஜ அலங்காரத்தில், தேவியருடன், வீதியுலா சென்றார். அவர், கோவில் திரும்பியதும், இரவு, சுவாமி, தாயார் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பக்தர்கள், சுவாமியை தரிசித்து வழிபட்டனர்.