பதிவு செய்த நாள்
11
ஏப்
2017
12:04
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஆதிபிரம்மோற்சவம் எனப்படும், பங்குனித் தேர் திருவிழா, 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து, நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம், ஸ்ரீரங்கம் நாச்சியாருடன் நம்பெருமாள் சேர்த்தி சேவை சாதித்தார். நேற்று காலை, 10:00 மணிக்கு, நம்பெருமாள் தேரில் எழுந்தருளினார். 10:45 மணிக்கு கோரதம் எனப்படும் பங்குனித் தேர், வடம் பிடித்து இழுக்கப்பட்டது. பல ஆயிரம் பக்தர்கள், ரங்கா ரங்கா... கோஷத்துடன், தேரை வடம் பிடித்து இழுத்தனர். சித்திரை வீதிகளில் வலம் வந்த தேர், நிலையை வந்தடைந்தது.