புதுச்சேரி: சாரம் முத்து விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.சாரம், காமராஜ் சாலையில் அமைந்துள்ள முத்து விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 9ம் தேதி பூர்வாங்க பூஜை துவங்கியது. கும்பாபிஷேக தினமான நேற்று காலை 5:00 மணிக்கு கோ பூஜை, யாகசாலை பூஜை, 9.15 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. அதன தொடர்ந்து, 9:30 மணிக்கு கோவில் கோபுர கலசம் மீது புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. மயிலம் பொம்மபுரம் ஆதீனம், சிவஞான பாலய சுவாமிகள், கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். சபாநாயகர் வைத்திலிங்கம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.