நங்கவள்ளி: நங்கவள்ளி, லட்சுமி நரசிம்மர், சோமேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா, கடந்த, 1ல் துவங்கியது. வரும், 17 வரை நடக்கும் விழாவில், நேற்று தேர்த்திருவிழா நடந்தது. அறநிலையத்துறை அதிகாரிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள், தேரை வடம்பிடித்து இழுத்து துவக்கிவைத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் கோவிலை வந்தடைந்தது