Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மத்தாளக்கோம்பு ஊற்றில் நீரில்லை: ... வள்ளியம்மன் கோவில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு மாவட்ட கோவில்களில் ஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2017
02:04

ஈரோடு: தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தின்  அனைத்துக் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.துர்முகி ஆண்டு நிறைவுற்று, ஹேவிளம்பி ஆண்டு நேற்று
பிறந்தது. மோளக்கவுண்டம் பாளையம் சித்தி விநாயகர், அனுக்கிரக ஆஞ்சநேயர் கோவிலில், 44வது ஆண்டு சித்திரை கனி திருவிழா நடந்தது. மாலையில் சிறுவர், சிறுமியருக்கான
விளையாட்டு போட்டிகள் நடந்தன. கள்ளுக்கடை ராம பக்த ஆஞ்நேயர் கோவிலில் சுவாமிக்கு, மா, பாலா, வாழை முதலான முக்கனிகளுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

* பவானி சங்கமேஸ்வரர் கோவில், ஆதிகேசவபெருமாள் கோவில், செல்லியாண்டியம்மன் கோவில், வர்ணபுரம் மாரியம்மன் கோவில், ஓம்காளியம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவிலில் நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.

* தமிழ் புத்தாண்டை கொண்டாட பவானிசாகர் பூங்காவுக்கு, ஈரோடு மட்டுமின்றி,கோவை, திருப்பூர், நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் வந்தனர்.

* புன்செய்புளியம்பட்டி, அண்ணாமலையார், கரிவரதராஜ  பெருமாள், காமாட்சியம்மன், ஊத்துக்குழி அம்மன், ஐயப்பன் கோவில்களில், அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

* தமிழ் கடவுளான முருகனை தரிசனம் செய்ய, சென்னிமலை முருகன் கோவிலுக்கு நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். ஐந்து மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி
தரிசனம் செய்தனர்.

* கோபி வேலுமணி நகர், சக்தி விநாயகருக்கு, 155 கிலோ அளவில், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, நெல்லிக்கனி, அண்ணாச்சி பழம், தர்பூசணி, எலுமிச்சை உள்ளிட்ட பழங்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.

* கொடுமுடி, கந்தசாமிபாளையம் சடையப்ப சுவாமி கோவிலில், 50 மூட்டை அரிசி கொண்டு சாதம் வடித்து, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல சிவகிரி வேலாயுதசாமி கோவில், எல்லைமாகாளியம்மன்,  ரமானந்தசாமிகோவில், செட்டிதோட்டம்புதூர் நாகத்தம்மன், வேட்டுவபாளையம் புத்தூரம்மன் கோவில் உள்ளிட்ட
கோவில்களிலும் சிறப்பு அலங்காரங்கள், ஆராதனைகள்  செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

* மொடக்குறிச்சி, காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவிலில் நேற்று காலை, 108 சங்காபிஷேகம், ருத்ர பாராயண ஹோமம் நடந்தது. நேற்று நல்ல நாயகி உடனமர்
நட்டாற்றீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்கும் உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோத்சவத்தையொட்டி, உற்சவர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் சண்முகவிலாச மண்டபத்தில், திரிசுதந்திரர்கள் அத்துமீறி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar