குளித்தலை: குளித்தலை அடுத்த, ஆர்.டி.மலை கோலமாயிரம் கொண்ட பிடாரி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. முன்னதாக, சுவாமி சப்பரம் பவனி வருதல், எல்லை சென்று வருதல், காப்பு அறுத்தல், குதிரை வாகன பவனி, கலை நிகழ்ச்சிகள் ஆகியன நடந்தன. முக்கிய நிகழ்ச்சியாக நடந்த தேர்த்திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஆர்.டி.மலை கோவில் அர்ச்சகர் கந்த சுப்ரமணி, வேதரத்தினம் ஆகியோர் பூஜைகளை நடத்தினர். முடிவில் பாசிபதம் எனும் புராண நாடகம் நடந்தது. விழாவில், திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.