பதிவு செய்த நாள்
15
ஏப்
2017
03:04
கரூர்: கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கல்யாண வெங்கடரமண கோவில், மாரியம்மன் கோவில், புகழிமலை பாலதண்டாயுதபாணி கோவில், வெண்ணைமலை முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், புதுமண தம்பதியர், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, சுவாமியை வழிபட்டனர். மேலும், வீடுகளில் கனிகள் காணும் நிகழ்ச்சிகளும் வெகுவிமர்சியாக நடந்தது. கேரள மாநிலத்தை சேர்ந்த மக்கள் விஷூ பண்டிகையை கொண்டாடும் விதமாக, மா, பலா, வாழை
போன்ற பழ வகைகள், நகைகள் போன்றவற்றை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினர்