பதிவு செய்த நாள்
18
ஏப்
2017
12:04
ஊட்டி : ஊட்டி பிங்கர்போஸ்ட் தெரசன்னை ஆலயத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட ஆளுயர சிலுவை மறைமாவட்ட பிஷப் அமல்ராஜ் திறந்து வைத்தார்.
ஊட்டி பிங்கர்போஸ்ட் தெரசன்னை ஆலயத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆளுயர சிலுவையை மறைமாவட்ட பிஷப் அமல்ராஜ் திறந்து வைத்தார். இதில், செயின்ட் மேரீஸ் ஆலய பங்கு தந்தை வின்சென்ட், குருக்கள் அமல்ராஜ் மற்றும் கிங்ஸ்டன் முன்னிலை வகித்தனர்.
இந்த சிலுவையை அமைத்த, பங்கு தந்தை பெனடிக்ட் கூறும்போது, இந்த சிலுவை முன்பாக, அனைவரும் பிரார்த்திக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதியில், அன்பும், மனிதாபிமானமும் வளரும்," என்றார். தொடர்ந்து, திருப்பலி, சிலுவை அர்ச்சிப்பு நிகழ்ச்சிகள் நடந்த, இதில், திரளான பங்கு மக்கள் பங்கேற்றனர்.