பெரியகுளத்தில் பாரதீ தீர்த்த சுவாமிகளிடம் ஆசி பெற்ற ஓ.பி.எஸ்.,
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2017 12:04
பெரியகுளம்: பெரியகுளத்தில் சிருங்கேரி பீடாதிபதி பாரதீ தீர்த்த சுவாமிகளிடம், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆசி பெற்றார். தேனிமாவட்டம் பெரியகுளம் சிருங்கேரி மண்டபத்திற்கு வந்த பாரதீதீர்த்த சுவாமிகள் விதுசேகர பாரதீ சுவாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்று ஆசீர்வாதம் பெற்றார்.குருவந்தனம், துளிபாதபூஜை, வேதகோஷம், இறைவணக்கம், சமஸ்கிருதம் மற்றும் தமிழில் வரவேற்புரை நடந்தது.அருளுரை, சாரதா சந்திரமவுலீஸ்வர பூஜை நடந்தது. வேதபாடசாலைகளுக்கு இடையேயான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, சிருங்கேரி மடத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கவுரிசங்கர் பரிசு வழங்கினார்.