அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை செல்வ விநாயகர் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. புத்தாண்டை முன்னிட்டு, அவலூர்பேட்டை செல்வ விநாயகர் கோவிலில், மகா தீபாரதனை நடந்தது. சென்னை, தண்டையார் பேட்டையை சேர்ந்த 16 வயதுள்ள நந்திகேஸ்வரனின் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.