கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் திருபவித்ரோத்சவ சிறப்பு ஹோமம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2011 10:11
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் திருபவித்ரோத்சவ சிறப்பு ஹோமம் நடந்தது. கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் கடந்த 5ம் தேதி திருபவித்ரோத்சவம் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் யாகசாலை பூஜைகள், பூர்ணாஹுதி, அக்னி பிரதிஷ்டை கலச ஸ்தாபனம் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு பெருமாள் தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். தொடர்ந்து சிறப்பு யாகசாலை ஹோமம், பிரதான ஹோமம், பூர்ணாஹுதி, சாற்றுறை நடந்தது. தேசிக பட்டர் வழிபாட்டினை நடத்தி வைத்தார்.