திருவரங்க பெருமாள் அரையருக்கு மஞ்சள் காப்பிட்ட ராமானுஜா ! பெரிய திருமலை நம்பிகளிடம் ராமாயணம் கேட்ட ராமானுஜா ! திருமலையானுக்கும் திருத்தமாய் மாலை தர அனந்தாழ்வானைத் தந்த ராமானுஜா ! ரங்கனும் " பரமபதத்துக்கும், பூலோகத்துக்கும் உடையவன்(ர்) நீ " என்ற ராமானுஜா !
அடியோங்களையும் ஆட்கொள்ள வந்த காரேய் கருணை ராமானுஜா ! நீர் எமக்கு முன் பிறந்ததால் நாங்களும் உய்தோம் ! உய்ய ஒரே வழி என்றும் உடையவர் திருவடி.