Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் மாரியம்மன் பொங்கல் ... மே 7ல் மதுரை மீனாட்சி அம்மன்  திருக்கல்யாணம் மே 7ல் மதுரை மீனாட்சி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அசத்தி எடுக்கும் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்!
எழுத்தின் அளவு:
அசத்தி எடுக்கும் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்!

பதிவு செய்த நாள்

04 மே
2017
12:05

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று (மே 04) துவங்குகிறது. இந்த வருடம் அக்னி நட்சத்திரம் மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.

அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை. என்றாலும், சித்திரை மாதம், பரணி 3வது பாதத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலம் அக்னி நட்சத்திரம் எனப்படுகிறது. இந்த காலத்தில் சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் நேரம். அப்போது சூரியனுக்கு நட்சத்திர அந்தஸ்தை கொடுக்கப்படுகிறது. சூரியன் என்பது விண்மீன் தான். மற்ற காலங்களில் நாம் அதனை சூரியன் என்கிறோம். அக்னி நட்சத்திரம் ஆண்டுதோறும் 21 நாட்கள் வருகின்றன. அக்னி நட்சத்திர நாளில் சந்திரன் மட்டுமல்லது. பூமி கூட சூரியனுக்கு சற்று அருகே இருக்கும். அக்னி நட்சத்திரம் என்பது சூரியனுடைய சஞ்சாரம் தொடர்பாக அமையும் காலப்பகுதியாகும்.
 
பெரும்பாலும் சித்திரை மாத இறுதி பத்து நாட்களும் வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இணைந்த பகுதியாகும். இந்நாட்களில் முதல் ஏழு நாட்கள் சுமாராகவும், இடையில் ஏழு நாட்கள் மிக அதிகமாகவும் கடைசி ஏழு நாட்கள் சுமாராகவும் வெப்பத்தை தரும்.

அக்னி நட்சத்திர வரலாறு : முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்கள். தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது. அவன் உடம்பில் சேர்ந்த கொழுப்பைக் குறைக்க, ஒரு காட்டை அழித்து அந்த நெருப்பைத் தின்றால் தான் தீரும். எனவே அக்னி பகவான் காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தான். அவ்வனத்தில் உள்ள அரக்கர்களும் கொடிய விலங்குகளும் தாவரங்களும் சாந்தமான விலங்குகளும் தங்களை அக்னி தேவனின் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வருண தேவனிடம் முறையிட்டன. ’அக்னி உங்களை ஒன்றும் செய்யாமல் நான் காக்கிறேன்‘ என வருணன் கூறினான்.

இதையறிந்த அக்னி தேவன் கிருஷ்ணரிடம் ஓடி, ’நான் காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பெய்விக்கிறான். என்னைக் காப்பாற்றுங்கள்‘ என முறையிட்டான். கிருஷ்ணன் அர்ஜீனனைப் பார்த்தார். அர்ஜீனன் அம்புகளை சரமாரியாக எய்து வானை மறைத்து சரக்கூடு கட்டினான். அப்போது அக்னி தேவன் தன் ஏழு நாக்குகளால் வனத்தை எரிக்க முற்பட்டான். அப்போது கிருஷ்ணர், ’21 நாட்கள்தான் உனக்கு அவகாசம். அதற்குள் உன் பசியைத் தீர்த்துக் கொள்‘ என்றார். அதன்படி அக்னி தேவன் காண்டவ வனத்தை அழித்து விழுங்கி, தன் பசி தணிந்த அந்த 21 நாட்கள்தான் அக்னி நட்சத்திர தினம் என்று சாஸ்திரங்களில் கூறப்படுகிறது.

கத்திரியில் சூரிய வழிபாடு: சித்திரை மாதத்தின் கடைசி வாரமும், வைகாசி மாதத்தின் முதல் வாரமும் சூரிய பகவான் மிக அதிக அளவில் வெப்பத்தைத் தருவதால், இந் நாட்களை கத்திரி நாட்கள் (அக்னி நட்சத்திரம்) என்று அழைத்தனர். சூரியனின் கதிர்கள் பூமியின் மீது நேர் கோணத்தில் விழும் காலமே கத்திரி. இக்காலங்களில் சூரியனின் அதிகபட்ச வெப்பம் பூமியினைத் தாக்குகிறது. பூமி 23.5 பாகை சாய்வான நிலையில் சீரான அச்சில் சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றுகிறது. அப்படிச் சுற்றும்பொழுது பூமியின் வடபுலம் ஆறு மாதங்களும், தென்புலம் ஆறு மாதங்களும் சூரியனின் ஒளி விழும் காலங்களாகும். அப்படி சூரியனின் ஒளி விழும் காலம் கோடை என்றும் சூரியனின் ஒளி விழாத காலம் குளிர் காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்காலங்களில் மொட்டை போடுதல், நிலம் தோண்டுதல், வீடு கட்டத் தொடங்குதல், மரம் அல்லது செடிகள் வெட்டுதல், தோட்டம் அமைத்தல், விதை விதைத்தல், புதிய குடியிருப்புப் பகுதி அமைப்பது (பிளாட் போடுவது) போன்றவற்றை செய்யக்கூடாது என சாஸ்திரம் கூறுகிறது.

இந்த நாட்களில் திருமணம் நிச்சயதார்த்தம் செய்தல், பெண் அல்லது மாப்பிள்ளை பார்த்தல், உபநயனம் மற்றும் பரிகார ஹோமங்கள் போன்றவற்றைச் செய்யலாம் என்றும் கூறுகிறது. அக்னி சொரூபமான சிவலிங்கம் மூன்று பிரிவுகளால் ஆனது. இவை சாந்து எனும் மூலிகைக் கலவை கொண்டு பிணைக்கப்பட்டிருக்கும். அக்னி நட்சத்திர சமயத்தில் இந்த மூலிகைக் கலவை காய்ந்து சிவலிங்கம் ஆவுடையாரிலிருந்து பிரிவதைத் தடுப்பதற்கு சிவலிங்கத்தின் மேல் தாரா பாத்திரம் அமைத்து, அதிலிருந்து நீர் சொட்டு சொட்டாக விழும்படி அமைத்து, சிவலிங்கம் குளிர்விக்கப்படுகிறது. தாரா பாத்திரத்தில் உள்ள நீரில் வெட்டி வேர் இட்டு அது பெருமானின் மீது விழும்போது அவரது உக்ரம் தணிந்து சாதமடைந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக ஐதீகம். இதனை ஜலதாரை என்று குறிப்பிடுவர். கருவறையில், ஜலதாரை குளிர்ச்சி காற்றில் பரவி, பக்தர்களையும் குளிர்விப்பதாக அமைகிறது.

முன்னொரு காலத்தில் முனிவர்கள் பன்னிரெண்டு ஆண்டுகள் இடைவிடாமல் நெய் ஊற்றி சுவேதகி எனும் யாகம் செய்தனர். அக்னி தேவன் அந்த யாக நெய்யை உண்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டான். மூலிகைச் செடிகள் நிறைந்த காண்டவ வனத்தை உண்டால், அவனது உடல் நலம் பெறும் என்றனர். அதன்படி அவன் காண்டவ வனத்தை உண்ண முற்பட்டபோது, அங்கிருந்த உயிரினங்கள் வருணனை வேண்ட, பலத்த மழை பெய்தது. எனவே, அக்னி திருமாலின் உதவியை நாடினான். மகாவிஷ்ணு, அக்னிக்கு உதவ அர்ஜுனனை அனுப்பி வைத்தார். அவன் அம்புகளால் கூரை அமைத்து மழையைத் தடுத்து அக்னி பகவான் காட்டினை உண்ண உதவினான். இருபத்தியோரு நாட்கள் இந்த காண்டவ வன தகனம் நடைபெற்றது. சூரியனின் வெப்பமும், அக்னியின் வெம்மையும் உலகையே தகிக்கச் செய்தது இந்த அக்னி நட்சத்திர காலகட்டமாகும்.

சூரியனின் துணைவி உஷாதேவி, தனது கணவரின் வெப்பம் தாங்காமல் தவித்தாள். தமது நிழலையே ஒரு பெண்ணாகப் படைத்து, அங்கே இருக்கச் செய்து விட்டு தான் மறைந்து வாழ்ந்தாள். நிழல் பெண்ணுடன் வாழ்ந்த சூரியன் ஒரு கால கட்டத்தில் உண்மை உணர்ந்து உஷாவை மீண்டும் அழைத்தாள். அவள் மறுக்க, சூரியன் தமது வெம்மையைக் குறைத்திட முடிவு செய்தார். அதன்படி, உஷாதேவியின் தந்தை விசுவகர்மா பகவானின் தேஜஸ்ஸை மழுக்கி, அவனது வெப்பத்தைத் தணித்தார். தாம் இழந்த ஒளியை வருடத்தில் சில நாட்கள் திரும்பப் பெற வேண்டும் என விரும்பினான் சூரியன். அதன்படி சூரியன் தனது முழுமையான தேஜஸுடன் இருக்கும் காலமே அக்னி நட்சத்திரம் என்கிறது புராணம்.

அக்னி நட்சத்திரத் தொடக்க நாள் முதற்கொண்டு அதிகாலையில் எழுந்து நீராடுங்கள். பூஜை அறையில் அரிசி மாவினால் சூரியக் கோலம் வரைந்து.

ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தந்நோ சூரிய: ப்ரசோதயாத்

எனும் சூரிய காயத்ரி மந்திரத்தைக் கூறி, மனதார வழிபடுங்கள். கத்திரி முதல் நாளிலும் கடைசி நாளிலும் சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்து  சூரிய பகவானை வழிபடுவது சிறப்பு. அதோடு, நெய் தீபம் ஏற்றி வைத்து முருகப் பெருமான் துதிகளைச் சொல்வதும், வெம்மை தீர்க்கும் மாரியம்மன், மீனாட்சியம்மனை வழிபடுவதும் நலம் பயக்கும். பரணிக்கு உரிய துர்கையையும், ரேவதிக்கு உரிய பிரம்மனையும், கிருத்திகைக்கு உரிய அக்னி பகவானையும் வழிபடுவது சிறந்தது. சிவபெருமான், நரசிம்மர், மகாவிஷ்ணு, சீதளா தேவி போன்ற தெய்வங்களை வணங்குவதும் நன்மை சேர்க்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிருஹ்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; சித்திரக்குடி வயல்வெளியில் புதைந்திருந்த 9-10ம் நூற்றாண்டினை சேர்ந்த சோழர் கால நந்தி சிலை, ... மேலும்
 
temple news
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar