பதிவு செய்த நாள்
05
மே
2017
02:05
கரூர்: சிருங்கேரி சாரதாபீடம் மஹா சன்னிதானம் ஜகத்குரு பாரதீ தீர்த்த சுவாமிகள் மற்றும் ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள் ஆகியோர் நேற்று இரவு, 7:00 மணிக்கு கரூருக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பட்டின பிரவேசம் நடந்தது. கரூர் அர்விந் ஏ டிரேடர்ஸ் வளாகத்தில் சுவாமிகளுக்கு தூளிபாதை பூஜை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு ஜகத்குருவின் அனுக்ரஹ பாஷணம், 9:00 மணிக்கு சாரதா சந்திர மவுளீஸ்வர பூஜை மற்றும் பாத பூஜை நடந்தது. இன்று (5ம் தேதி) காலை, 7:00 மணிக்கு சிருங்கேரி சங்கர மட அர்ச்சகரால்,
சாரதா சந்திர மவுளீஸ்வர பூஜை, சகர நவாவரண பூஜை நடக்கிறது. காலை, 9:30 முதல் பகல், 12:00 மணி வரை சன்னிதான தரிசனம் மற்றும் பாத பூஜை, பிக்ஷா வந்தனம், தீர்த்த பிரசாதம் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, ஜகத்குருவால், சாரதா சந்திர மவுளீஸ்வர பூஜை, சக்ர பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை, கரூர் சிருங்கேரி மட மேலாளர் சங்கர நாராயணன் செய்து
வருகிறார்.