வைகாசியில் வரும் தேய்பிறை ஏகாதசிக்கு வரூதிநி ஏகாதசி என்று பெயர். இந்நாளில் (மே 22) காலையில் நீராடி பெருமாள் கோவிலில் நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். துளசி அர்ச்சனை செய்வது சிறப்பு. அன்று செய்யப்படும் கல்வி தானத்திற்கு கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஏழை மாணவர் ஒருவருக்கு ஒரு ரூபாய் தானம் கொடுத்தாலும், அது கோடி மடங்காகி நமக்கே திரும்ப கிடைக்கும். வைகாசி வளர்பிறை ஏகாதசிக்கு மோகினி ஏகாதசி என்று பெயர். இந்நாளில் (ஜூன் 5) பெருமாள் கோவிலில் வழிபாடு செய்தால் பாவம் நீங்கி புண்ணியம் பெருகும். அறியாமை நீங்கி நல்ல புத்தி உண்டாகும். இதன் மகிமையை ராமர் குலகுருவான வசிஷ்டரிடம் கேட்டறிந்ததாக புராணம் கூறுகிறது.