அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை கோயிலில், நகரில் மழை பெய்ய வேண்டி, அண்டாவிற்குள் அமர்ந்து ஜபம் நடந்தது. அருப்புக்கோட்டையில் கடந்த நான்கு ஆண்டுகளாக மழை சரிவர பெய்யவில்லை. இதனால், நீர்நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டது. மக்கள் தண்ணீர் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் கடுமையாக உள்ள நிலையில், மழை பெய்வதற்கான அறிகுறியும் இல்லை. அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுபகுதியில் மழை பெய்ய வேண்டி, அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நேற்று காலை, வருண ஜபம் நடந்தது. மூன்று அண்டாவில் தண்ணீர் நிரப்பி, அர்ச்சகர்கள் உட்கார்ந்த நிலையில், மழை வேண்டி பலமணி நேரம் ஜெபம் செய்தனர். பின்னர், சுவாமி அபிஷேக ஆராதனைகள் நடந்தன.